முகப்பு
இந்தியா

இந்தியாவில் தஞ்சமடைந்தாரா மகிந்த ராஜபட்ச? தூதரகம் விளக்கம்

மகிந்த ராஜபட்ச உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பி வந்ததாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

Updated On : 11 மே, 2022 at 8:57 AM
மகிந்த ராஜபட்ச
பகிர்:

மகிந்த ராஜபட்ச உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பி வந்ததாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். தொடர்ந்து, மகிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது.

கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை கண்டதும் சுடுவதற்கு முப்படைகளுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதற்கிடையே பிரதமர் இல்லத்தைவிட்டு வெளியேறிய ராஜபட்சே குடும்பத்தினர் கடற்படை தளத்திற்கு நேற்று வந்தனர். தொடர்ந்து, கடற்படை தளத்தில் போராட்டக்காரர்கள் குவிந்தனர்.

கடற்படை தளத்திலிருந்து மகிந்த ராஜபட்ச, அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் வெளிநாடுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக செய்திகள் வேகமாக பரவி வருகின்றன.

இந்நிலையில், இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதை உயர் ஆணையம் கவனித்து வருகின்றது.

இந்த தகவல்கள் அனைத்து தவறானவை. இதில், எந்தவித உண்மைகளும் இல்லை. இந்த செய்திகளை உயர் ஆணையம் கடுமையாக மறுக்கின்றது” எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.