முகப்பு
இந்தியா

பாஜக வளர்ச்சியை கொடுக்கிறது, மற்ற கட்சிகள் வன்முறையை கொடுக்கிறது: திரிபுரா முதல்வர்

பாஜக அரசு கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து திரிபுராவில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், முந்தைய அரசுகள் மாநிலத்தில் வன்முறையையே வளர்த்ததாக திரிபுரா முதல்வர் மாணிக் சஹா தெரிவித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

பாஜக அரசு கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து திரிபுராவில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், முந்தைய அரசுகள் மாநிலத்தில் வன்முறையையே வளர்த்ததாக திரிபுரா முதல்வர் மாணிக் சஹா தெரிவித்தார்.

திரிபுரா மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் பாஜகவிற்கு மக்கள் வாக்களித்து மீண்டும் ஆட்சியில் அமர செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு திரிபுரா மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநில முதல்வர் மாணிக் சஹா இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

திரிபுரா மாநிலத்தின் உனாகோட்டி மாவட்டத்தில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மாணிக் சஹா பேசியதாவது: “ கடந்த 35 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சியில் திரிபுரா தாக்குதல்கள் மற்றும் கொலைகளை மட்டுமே சந்தித்துள்ளது. அதேபோல காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின்போது நடைபெற்ற வன்முறைகளையும் நீங்கள் மறக்க கூடாது. தற்போது மக்களுக்கு உள்ள ஒரே நம்பிக்கை பாஜக மட்டுமே. பாஜகவினை பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிடோர் சிறப்பாக வழிநடத்தி செல்கின்றனர். பாஜகவிற்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களின் நலனுக்காகவே உழைத்து வருகிறோம். மற்றவர்கள் அனைவருக்கும் வன்முறை மற்றும் கலவரங்களுடன் தொடர்புடைய நீண்ட வரலாறே இருக்கிறது. திரிபுராவில் குறைந்தது 100 பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களாவது கொல்லப்பட்டிருப்பார்கள். ஆயிரக்கணக்கானோர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார்கள்.” என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments