நீரவ் மோடியின் ரூ.500 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு
நீரவ் மோடிக்குச் சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீரவ் மோடிக்குச் சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்த நீரவ் மோடி(51), இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றாா். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரிட்டனில் கைது செய்யப்பட்ட அவா், அந்நாட்டுத் தலைநகா் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
வைர வியாபாரி நீரவ் மோடியை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், இன்று இந்தியாவில் நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான 39 சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.