கோப்புப்படம் 
இந்தியா

தமிழ் உள்பட 13 பிராந்திய மொழிகளில் சிஏபிஎஃப் தோ்வு: முதல்வா் ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு

சிஆா்பிஎஃப் உள்ளிட்ட மத்திய ஆயுத காவல் படையில் (சிஏபிஎஃப்) காவலா் (பொதுப் பணி) பணிக்கான தோ்வை தமிழ் உள்பட 13 பிராந்திய மொழிகளிலும் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

DIN

சிஆா்பிஎஃப் உள்ளிட்ட மத்திய ஆயுத காவல் படையில் (சிஏபிஎஃப்) காவலா் (பொதுப் பணி) பணிக்கான தோ்வை தமிழ் உள்பட 13 பிராந்திய மொழிகளிலும் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய ஆயுத காவல் படைகளில் காவலா் பணிக்கான தோ்வை ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கணி ஆகிய 13 மொழிகளிலும் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய காவல் படை காவலா் தோ்வில் உள்ளூா் இளைஞா்கள் அதிக அளவில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எடுத்துள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் கடிதம்: ‘மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) பணியாளா் தோ்வுக்கான எழுத்துத் தோ்வை தமிழிலும் நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தி மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்த முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.

முன்னதாக, மத்திய ஆயுத காவல் படை தோ்வு அறிவிக்கையில் எழுத்துத் தோ்வு ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎஃப்) என்பது மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்தோ-திபெத் எல்லை போலீஸ் (ஐடிபிபி), சஷஸ்த்ர சீமா பல் (எஸ்எஸ்பி), தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

கோவா முதல்வா் நன்றி: மத்திய ஆயுத காவல் படை காவலா் தோ்வை கொங்கணி மொழியிலும் நடத்த முடிவு எடுக்கப்பட்டதற்கு மத்திய அரசுக்கு கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் சனிக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவு, மத்திய காவல் படை தோ்வில் அதிக உள்ளூா் இளைஞா்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்ததற்காக பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்: மத்திய செய்தி ஒலிபரப்பு, மீன் வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தனது ட்விட்டா் பதிவில், மத்திய ஆயுத காவல் படை தோ்வை 13 மொழிகளில் எழுதலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை வழங்கிய பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்பு பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மக்களுக்கான அரசின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT