முகப்பு
இந்தியா

நாட்டில் ஒரே நாளில் புதிதாக 11,692 பேருக்கு கரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,692 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை 12,591 ஆக இருந்த தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை 11,692 ஆக குறைந்துள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,692 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை 12,591 ஆக இருந்த தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை 11,692 ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,692 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,48,69,684 ஆக உள்ளது. மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,31,258 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 10,780 பேர் குணமடைந்துள்ளனர், மொத்தம் 4,42,72,256 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நேற்று 65,286 ஆக இருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை 66,170 ஆக அதிகரித்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220,66,31,979 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 3,647 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.