இந்தியா

கடும் பனிப்பொழிவு: சிக்கிமில் 70 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

DIN

மோசமான வானிலை காரணமாக சிக்கிமில் சிக்கித் தவித்த 70 சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவம் பாதுகாப்பாக மீட்டுள்ளது. 

சிக்கிமின் குபுப் மற்றும் நாதங்கில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக கடந்த 20 ஆம் தேதி அங்கு சுற்றுலாப் பயணிகள் மாட்டிக்கொண்டனர். 

இதையடுத்து, 'ஆபரேஷன் ஹிம்ரஹத்' எனும் மீட்பு நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ், நேற்று குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட 70 சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு போதிய உணவு, உடை, இருப்பிட வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. 

பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதையடுத்து, 'ஆபரேஷன் ஹிம்ரஹத்' குழுவுக்கு இந்திய ராணுவம் பாராட்டு தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT