முகப்பு
இந்தியா

கோவாவில் இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்: காங்கிரஸ் முன்னாள் தலைவர்

கோவாவில் இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சர்ச்சில் அலெமாவோ தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:51 PM
பகிர்:

கோவாவில் இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சர்ச்சில் அலெமாவோ தெரிவித்துள்ளார். 

2022 கோவா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக திரிணமூல் காங்கிரஸில் இணைந்த அவெமாவோ, நாட்டிலும் கோவாவிலும் பாஜக செய்த பணிகளைப் பாராட்டியுள்ளார். தெற்கு கோவாவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், முதல்வர் பிரமோத் சாவந்த் தனது ஆட்சிக் காலத்தில் நிறைய வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளார், அடுத்த 40 ஆண்டுகள் கொடுத்தாலும் காங்கிரஸ் செய்திருக்காது. 

கோவாவில் காங்கிரஸ் முடிந்துவிட்டது. அதற்கு (தேர்தல்களில் வெற்றிபெற) வாய்ப்பு இல்லை. அவர்கள் எங்கும் இல்லை. பாஜக வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளது. கோவாவில் உள்ள இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறும். 2019 ஆம் ஆண்டு தெற்கு கோவா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெற்ற போதிலும், அந்தத் தொகுதியின் தற்போதைய எம்.பி.யால் எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படவில்லை. 

மோடி பிரதமரான பிறகு, நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளது. வாழ்க்கையில் அமைதி முக்கியம், பாஜக கொடுத்தது. அதற்காக அவர்களை நான் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அலெமாவோ, 2022 பேரவைத் தேர்தலில் பெனாலிம் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வென்சி விகாஸிடம் தோல்வியடைந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →