இந்தியாவில் ஒரே நாளில் 10,112 பேருக்கு கரோனா
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 10,112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 10,112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 67,806-ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அட்டவணையில், ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக தில்லியில் 6 பேரும், மகாராஷ்டிரத்தில் 5 பேரும் உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement
கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து 9,833 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனினும் புதிதாக 10,112 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 67,806-ஆக அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.