இந்தியா

கர்நாடக தேர்தல்: அதிமுக வேட்பாளர் வாபஸ்

DIN


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற்றுள்ளார். புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்த அதிமுக வேட்பாளர் அன்பரசன் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். 

ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்கள் 2 பேர் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அன்பரசனும் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளார். 

224 தொகுதிகளையுடைய கர்நாடகத்திற்கு மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

இன்று வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அன்பரசன் வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளார்.  

பாஜக கோரிக்கையை ஏற்று கர்நாடக சட்டப்பேரவை தேர்தலிலிருந்து வேட்பாளர் வாபஸ் பெற்றதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

SCROLL FOR NEXT