இந்தியா

ஹரியாணா: விபத்தில் சிக்கிய கார்த்திகேய சர்மா எம்பி கார்

ஹரியாணாவில் கார்த்திகேய சர்மா எம்பி சென்ற கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

ஹரியாணாவில் கார்த்திகேய சர்மா எம்பி சென்ற கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரியாணா மாநிலம், சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் உள்ள தூதிவாலா கிஷன்புரா கிராமத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு கார்த்திகேய ஷர்மா எம்பி குருகிராமுக்கு காரில் திரும்பினார். அப்போது இவரது கார் பின்னால் இருந்து டிரக் மோதியது.

இந்த விபத்தில் கார்த்திகேய சர்மா அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கார்த்திகேய சர்மாவை மேதாந்தா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் விபத்தில் சேதமடைந்த காரை காவலில் எடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஹரியாணாவில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT