முகப்பு
இந்தியா

சோனியா காந்தியை விஷக் கன்னி என விமர்சித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்

பிரதமர் நரேந்திர மோடியை விஷப் பாம்புடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் சோனியா காந்தியை விஷக் கன்னி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடியை விஷப் பாம்புடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் சோனியா காந்தியை விஷக் கன்னி எனக் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகௌதா பட்டீல் யத்நால் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: உலக நாடுகள் அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி வருகின்றன. ஒரு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு விசா வழங்க மறுத்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இன்று உலகத் தலைவராக உலகின் பல நாடுகளாலும் சிவப்புக் கம்பள மரியாதைக் கொடுத்து வரவேற்கப்படுகிறார். உலகத் தலைவர்களுடன் ஒன்றாக பல முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடுகிறார். அவரை விஷம் நிறைந்த பாம்புடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளனர். பார்ட்டிகளில் நடனமாடும் விஷக் கன்னி சோனியா காந்தி. அவர் நாட்டினைப் பாழக்கிவிட்டார். அவர் சீனா மற்றும் பாகிஸ்தானின் முகவராக செயல்படுகிறார் என்றார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகௌதா பட்டீல் யத்நாலின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். மேலும், அவர்கள் பாஜகவின் அந்த சட்டமன்ற உறுப்பினரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

முன்னதாக, கர்நாடக பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடி விஷப் பாம்பு போன்றவர் எனக் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →