முகப்பு
இந்தியா

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க இயலாது: ராகுல் காந்தி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க இயலாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க இயலாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரங்களின்போது அரசியல் தலைவர்களுக்கிடையே வார்த்தைப் போரும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க இயலாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. கர்நாடகத்தின் கலபுரகியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் இதனை தெரிவித்தார்.

இந்த பரப்புரையின் போது அவர் கூறியதாவது: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்சம் 150 இடங்கள் கிடைக்கும். கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க இயலாது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →