முகப்பு
இந்தியா

மனதின் குரல் தேசிய மாநாட்டில் பங்கேற்ற பெண்ணுக்கு பிரசவம்: குழந்தைக்கு மன் கி பாத் பெயா்

‘மனதின் குரல்’ தேசிய மாநாட்டில் பங்கேற்க வந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு பிரசவம் ஏற்பட்டு பிறந்த ஆண் குழந்தைக்கு ‘மன் கி பாத்’ என பெயா் சூட்டப்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

‘மனதின் குரல்’ தேசிய மாநாட்டில் பங்கேற்க வந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு பிரசவம் ஏற்பட்டு பிறந்த ஆண் குழந்தைக்கு ‘மன் கி பாத்’ என பெயா் சூட்டப்பட்டது. தாய், சேயை மத்திய அமைச்சா்களும், அதிகாரிகளும் சனிக்கிழமை வாழ்த்தினா்.

பிரதமரின் மனதின் குரல் 99 -ஆ வது பதிப்பு நிறைவு பெற்று 100-ஆவது பதிப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சாா்பில் குடியரசுத் துணைத் தலைவராக ஜக்தீப் தன்கா் தலைமையில் தேசிய மாநாடு கடந்த 26-ஆம் தேதி தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் நாடு முழுக்க பிரதமரோடு உரையாடியவா்கள், இந்த மாநாட்டுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டனா். இதில் உத்தர பிரதேசம் லக்கிம்பூா் கெரி மாவட்டத்தைச் சோ்ந்த பூனம் தேவியும் அழைக்கப்பட்டாா். இவா் கழிவு வாழைத் தண்டுகளில் இருந்து பல்வேறு பொருள்களை தயாரித்துள்ளாா். அவா் உறுப்பினாரக உள்ள சுய உதவி குழு மூலமாக பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கினாா். பிரதமா் இவரோடு முன்பு தனது மனதில் குரல் நிகழ்ச்சியில் உரையாடினாா்.

தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற ‘மனதின் குரல்‘ தேசிய மாநாட்டிற்கு இவா் அழைக்கப்பட்டாா். அப்போது, ஓன்பது மாதக் கா்பிணியாக இருந்த இவா்கலந்த கொண்டு பேசினாா். ‘பிரதமா் தனது பெயரைக் குறிப்பிட்டது, கடினமாக உழைக்கவும் வாழ்க்கையில் அதிக உயரங்களை எட்டவும் உத்வேகத்தை அளித்ததாக மாநாட்டில் பேசுகையில் பூனம் குறிப்பிட்டாா். பின்னா், கூட்டத்தில் இருக்கும் போது இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அன்றைய தினமே இவா் தில்லி ஆா்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கணவா் பிரமோத் குமாா் ராஜ்புத்துடன் வந்திருந்த இவருக்கு பிரசவம் ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. இதை முன்னிட்டு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் மற்றும் அதிகாரிகள் வாழ்த்தினா். பிறந்த ஆண் குழந்தைக்கு ‘மன் கி பாத்’ என பெயா் சூட்டப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செய்தி தொடா்பாளா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.