முகப்பு
இந்தியா

இந்தியாவில் புதிதாக 5,874 பேருக்கு கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,874 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,874 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 49,015 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 25 பேர் பலியான நிலையில், நாட்டில் கரோனாவுக்கான மொத்த பலி எண்ணிக்கை 5,31,533 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 3.31 சதவிகிதமாக உள்ளது. ஒரு வாரத்துக்கான கரோனா பாதிப்பு விகிதம் 4.25 சதவிகிதமாக உள்ளது. 

நாட்டில் மொத்தமாக 4.49 கோடி பேர் (4,49,45,389) கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த கரோனா பாதிப்புகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 0.11 சதவிகிதமாக உள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 98.71 சதவிகிதமாக உள்ளது. கரோனா பாதிப்புகளினால் இறந்தவர்களின் விகிதம் 1.18 சதவிகிதமாக உள்ளது. இதுவரை தடுப்பூசி முகாம்களின் மூலம் நாடு முழுவது 220.66 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →