இந்தியா

ஜூலையில் ரூ.1.65 லட்சம் கோடியைக் கடந்த ஜிஎஸ்டி வசூல்!

DIN

ஜூலை மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,65,105 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது 2022-ஆம் ஆண்டு ஜூலை மாத வருவாயுடன் ஒப்பிடுகையில் 11 சதவீத அதிகரிப்பாகும். ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூ.1.6 லட்சம் கோடியைக் கடப்பது இது 5-வது முறையாகும். 

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன்படி, மொத்தமாக ரூ.1,65,105 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது.

அதில் மத்திய சரக்கு சேவை வரியாக(சிஜிஎஸ்டி) ரூ.29,773 கோடியும், மாநில சரக்கு சேவை வரியாக(எஸ்ஜிஎஸ்டி) ரூ.37,623 கோயிடத, ஒருங்கிணைந்த சரக்கு சேவ வரியாக(ஐஜிஎஸ்டி) ரூ.85,930 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. செஸ் வரியாக ரூ.11,779 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT