தில்லி அதிகாரிகள் நியமன அதிகார மசோதா கடும் அமளிக்கு இடையே மக்களவையில் நிறைவேறியது.
தில்லி அரசின் அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தன.
தில்லி அரசின் உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு ஆணையம் அமைத்து மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.
இதற்கு தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அக்கட்சியின் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆதரவு தெரிவித்திருந்தார்.
எனினும் மக்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் தில்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதாவை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.