இந்தியா

உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி: ராகுல் காந்தி

DIN

எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். 

உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உண்மை எப்போதும் வெல்லும், எனது பாதை தெளிவாக உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும், என் வேலை என்ன என்பதில் என் மனதில் தெளிவு இருக்கிறது. மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். முன்னதாக அவர் தனது ட்விட்டர் பக்க்தத்தில், 'எது வந்தாலும் என் கடமை அப்படியே தொடரும். இந்தியா என்ற கருத்தைப் பாதுகாப்போம்' என்று பதிவிட்டுள்ளார். 

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதனடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 

மேலும் எதன் அடிப்படையில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது என்பது குறித்து கீழமை நீதிமன்றங்கள் விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின் மூலமாக ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியில் தொடர்வார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT