இந்தியா

தொடரும் கொடூரம்... திருடியதாகக் கூறி சிறுவர்களை சிறுநீர் குடிக்கவைத்த அவலம்!

திருடியதாக சந்தேகத்தின் பேரில் சிறுவர்கள் இருவரை சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயை திணித்து, ஊசி செலுத்திய கொடும் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

DIN


உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டம் பத்ரா காவல்நிலையம் பகுதியில் மனித குலத்தையே அவமானப்படுத்தும் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருடியதாக சந்தேகத்தின் பேரில் சிறுவர்கள் இருவரை சிறுநீர் குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயை திணித்து, ஊசி செலுத்திய கொடும் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டம் பத்ரா காவல்நிலையம் பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் ரூ. 2,000 காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகத்தின் பேரில், பண்ணை உரிமையாளர்கள், டீ கொடுப்பதாகக் கூறி 10 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் இருவரை பிடித்து வந்து கொடூரமாக தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அதாவது, சிறுவர்கள் இருவரின் கை, கால்களைக் கட்டி, நிர்வாணமாக்கி சிறுநீரை குடிக்க வைத்து, அவர்களின் ஆசனவாயில்  நறுக்கிய பச்சை மிளகாயை திணித்து, ஊசி செலுத்தி விடியோ எடுத்துள்ளனர். தற்போது, மனித குலத்தையே அவமானப்படுத்தும் கொடூர சம்பவ விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து இது தொடர்பாக போலீசார், இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்து 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான சவுத் மற்றும் ஷாபு இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்தியப்பிரதேசத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் கழித்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு மனிதத் தன்மையற்ற செயல் தற்போது உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT