கோப்புப்படம் 
இந்தியா

காஷ்மீரில் அமைதி நிலவினால் மெகபூபா முப்திக்கு வீட்டுக் காவல் ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றால் முன்னாள் முதல்வர் முதல்வர் மெகபூபா முப்தியை நேற்று முதல் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்களே ஏன்?

DIN


புதுதில்லி: ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றால் முன்னாள் முதல்வர் முதல்வர் மெகபூபா முப்தியை நேற்று முதல் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்களே ஏன்? என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

நான்கு ஆண்டுகளுக்கு முன் அரசியல் சாசனத்தின் 370 ஆம் பிரிவை நீக்கிய பிறகு, காஷ்மீரில் அமைதி நிலவுவதாக மத்திய பாஜக அரசு கொண்டாடுகிறது!

அமெரிக்க அதிபர் கென்னடி சொன்னது என் நினைவிற்கு வருகிறது: "நாம் விரும்புவது கல்லறையின் அமைதியும் அடிமையின் மௌனமும் அல்ல"

ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றால், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியை நேற்று முதல் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்களே ஏன்?

காஷ்மீரின் இரண்டு முக்கிய கட்சிகளின் அலுவலகங்களுக்கு ஏன் பூட்டுப் போட்டிருக்கிறார்கள்?

இந்தியா முழுவதும் சுதந்திரம் நசுக்கப்படுகிறது ஆனால் ஜம்மு காஷ்மீரில் அது மிகக் கடுமையாக ஒடுக்கப்படுகிறது என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT