நிலவை படம் பிடித்த சந்திரயான் 3(விடியோ)
நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பை முதல்முறையாக படம்பிடித்து அனுப்பியுள்ளது.
நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பை முதல்முறையாக படம்பிடித்து அனுப்பியுள்ளது.
நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை ரூ. 615 கோடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் சந்திரயானை நிலவுக்கு அருகே கொண்டு செல்லும் விதமாக அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதைத் தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
தொடா்ந்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி சந்திரயான் புவி ஈா்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணம் மாற்றியமைக்கப்பட்டது. 5 நாள்கள் பயணத்துக்குப் பிறகு நிலவுக்கு அருகே விண்கலம் சனிக்கிழமை சென்றது. இதையடுத்து விண்கலம் நிலவின் வட்ட சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜி கைது செல்லும்: உச்சநீதிமன்றம்
அடுத்தகட்டமாக நிலவின் சுற்றுப்பாதை தொலைவு ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் குறைக்கப்பட்ட நிலையில், முதல்முறையாக நிலவின் மேற்பரப்பை நேற்றிரவு சந்திரயான் 3 படம்பிடித்து அனுப்பியுள்ளது.
அந்த காணொலியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, திட்டமிட்டபடி செயல்பட்டால் ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிா்பாா்க்கப்படுறது.