இந்தியா

பள்ளி சேர்க்கைக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை: ஒடிசா அரசு

ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று அம்மாநில அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

DIN

ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று அம்மாநில அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

ஆதார் அட்டை இல்லாமல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அஸ்வதி கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் அவர் கூறியது...

மாணவர்களின் சேர்க்கை தடையின்றி, சுமூகமாக இருக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கும்போது அசௌகரியத்தைச் சந்திக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. 

பள்ளி சேர்க்கைக்குப் பின், மாவட்டத்தின் பல்வேறு அலுவலங்களை ஒருங்கிணைத்து, ஆதார் அட்டை பெறுவதற்கு மாணவர்களுக்கு வசதி செய்ய வேண்டும். 

மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி சுமூகமாக பள்ளியில் சேர்க்க, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளை செயலாளர் கேட்டுக் கொண்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பகல் கனவு சிறப்பு... சுஷ்மிதா ஷெட்டி!

தீபாவளி ஸ்பெஷல்... ஸ்ரீஜா ராஜ்கோபால்!

உலகக் கோப்பைக்காக 4 ஆண்டுகள் காத்திருப்பு... மழையினால் கொந்தளித்த நியூசி. கேப்டன்!

எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது: ஆர்.பி.உதயகுமார்

வரன் தேடுபவரா? மேட்ரிமோனி தளத்திலும் மோசடி நடக்கலாம்! எச்சரிக்கை!!

SCROLL FOR NEXT