ராகுல் காந்தி 
இந்தியா

ராகுல் பறக்கவிட்ட முத்தம்: பாஜக பெண் எம்பிக்கள் புகார்!

பாஜக பெண் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முத்தங்களை பறக்கவிட்டதாக மக்களவை தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

DIN

தில்லி: பாஜக பெண் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முத்தங்களை பறக்கவிட்டதாக மக்களவை தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகின்றது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பங்கேற்று இன்று உரையாற்றினார்.

மத்திய அரசை கடுமையாக தாக்கிப் பேசிய ராகுல் காந்தி, தனது உரை முடிந்தவுடன் ராஜஸ்தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவசரமாக அவையை விட்டு வெளியேறினார்.

அப்போது பாஜக பெண் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் பகுதியை நோக்கி ராகுல் காந்தி முத்தங்களை காற்றில் பறக்கவிட்டுச் சென்றதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றம்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, மக்களவை தலைவரிடம் ராகுல் காந்தி மீது பாஜக பெண் எம்.பி.க்கள் புகார் கொடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT