முகப்பு
இந்தியா

காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் இடைநீக்கம்!

மக்களவையில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 10 ஆகஸ்ட், 2023 at 9:09 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:38 PM

மக்களவையில் இருந்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் மூன்றாவது நாளாக இன்று விவாதம் நடைபெற்றது.

அப்போது, 'நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாங்கள் யாரும் யோசிக்கவில்லை. பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்னை குறித்து பேச வேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் நாடாளுமன்றத்திற்கு வருமாறு கோரவில்லை, பிரதமரை மட்டுமே வருமாறு நாங்கள் கோரினோம்' என்று பேசினார். 

Advertisement

இந்த நிலையில், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்ததாக கூறி மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆதிர் ரஞ்சனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.