இந்தியா

என்னை அவதூறாகப் பேசுவது எதிர்க்கட்சிகளுக்கு டானிக்: பிரதமர் மோடி

DIN

என்னை அவதூறாகப் பேசுவது எதிர்க்கட்சிகளுக்கு டானிக் குடிப்பது போல இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மூன்றாவது நாளாக இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. 

மக்களவையில் நடந்துவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அவர் பேசியதாவது:

எதிர்க்கட்சிகளின் வசை மொழிகளை நான் வாழ்த்துகளாக எடுத்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் யாரை திட்டுகின்றனரோ அவர்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்து விடுகிறார்கள்.

 கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். நாடு வளர்ச்சியடைவது எதிர்க்கட்சிகளின் பதற்றத்தை கொடுக்கிறது.  மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா பொருளாதார ரீதியாக முதல் மூன்று இடத்திற்கு உயர்ந்துவிடும். இந்திய பொதுத்துறை வங்கிகள் தங்களது லாபத்தை இரண்டு மடங்காக்கி இருக்கின்றன.

பாஜகவிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும். எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்பது கூட எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் கடந்த 3 நாள்களாக என்னை மிக மோசமாக விமரிசித்து வருகின்றனர்.

விமரிசனம் செய்வதில் மிகக் கீழான நிலையை எதிர்க்கட்சிகள் அடைந்திருக்கின்றன.  என்னை அவதூறாகப் பேசுவது எதிர்க்கட்சிகளுக்கு டானிக் குடிப்பது போல இருக்கிறது என்று பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT