கோப்புப் படம். 
இந்தியா

ராஜஸ்தானில் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் கவிழ்ந்தது: வீரர் ஒருவர் பலி

ராஜஸ்தானில் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வீரர் ஒருவர் பலியானார். 

DIN

ராஜஸ்தானில் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வீரர் ஒருவர் பலியானார்.
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஷாகர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எஸ்கே.துபே என்கிற வீரர் நிகழ்விடத்திலேயே பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
மேலும் 16 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ஜெய்சால்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்குள்ள ஜவஹர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
பலியான வீரரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வந்த பிறகு உடற்கூராய்வு மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதல் திருமணம் செய்வதுதான் மிகவும் கடினம்! - திருமண விழாவில் உதயநிதி பேச்சு

டாப்பு டக்கரு... நந்திதா ஸ்வேதா!

தீப ஒளியில்... அஞ்சனா ரங்கன்!

மிளிரும் சிற்பம்... ரவீனா தாஹா!

அரசு உதவி வழக்குரைஞர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

SCROLL FOR NEXT