விவாதிக்க பயந்து எதிர்க்கட்சியினர் ஓடிவிட்டார்கள்.. பிரதமர் மோடி
மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க பயந்து, எதிர்க்கட்சிகள் ஓடிவிட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க பயந்து, எதிர்க்கட்சிகள் ஓடிவிட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மணிப்பூர் விவகாரத்தை மத்திய அரசு கையாண்ட விதத்தை குறை கூறிய எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு மக்களின் வலி மற்றும் பாதிப்புகள் குறித்து எந்தக் கவலையும் இல்லை எல்லாம் அரசியல்தான் என்றும் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஓடியதை ஒட்டுமொத்த நாடே பார்த்தது. மணிப்பூர் மக்களுக்கு எதிர்க்கட்சியினர் துரோகம் செய்துவிட்டனர். கூட்டத் தொடர் தொடங்கும் முன்பே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் எழுதிய கடிதத்தில், மணிப்பூர் விவகாரம் விவாதிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார். மேலும், இது பற்றி மிக விரிவாக விவாதிக்க வேண்டியது மிக அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், உண்மையில் என்ன நடந்தது, நீங்கள் அனைவருமே பார்த்தீர்கள். அவ்வாறு நடக்க எதிர்க்கட்சிகள் விடவில்லை என்று பிரதமர் மோடி பேசினார்.