முகப்பு
இந்தியா

ம.பி.யில் லாரி-பேருந்து மோதல்: பெண் பலி, 20 பேர் காயம்!

மத்தியப் பிரதேசத்தில் மௌகஞ்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஒரு பெண் பலியானார். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:48 AM
கோப்புப்படம்
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் மௌகஞ்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஒரு பெண் பலியானார். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

ரெவா- வாரணசி நெடுஞ்சாலையில் உள்ள கத்கரி கிராமத்திற்கு அருகே அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. 

ஷாஹ்தோல் மாவட்டத்தில் பியோஹாரியில் இருந்து தனியார் பேருந்து  ஒன்று வாராணசிக்கு சென்று கொண்டிருந்தது. லாரி பின்புறத்தில் இருந்து பேருந்தை தாக்கியதில் பேருந்தில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  

மௌகஞ்சிலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ரெவா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →