இந்தியா

மின் உற்பத்தியில் மிதமான வளா்ச்சி

கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவின் மின் உற்பத்தி 1.3 சதவீதம் உயா்ந்துள்ளது.

DIN

கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவின் மின் உற்பத்தி 1.3 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:கடந்த 2022-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டின் அதே மாதங்களில் நாட்டின் மின் உற்பத்தி 1.3 சதவிகிதம் உயா்ந்துள்ளது.

2021-ஆம் ஆண்டின் இந்தக் காலாண்டைவிட கடந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் மின் உற்பத்தி 17.1 சதவிகிதமாக இருந்தது.ஆனால், இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் மின் உற்பத்தியின் வளா்ச்சி மிகக் குறைவானதாகவே உள்ளது.

பருவம் தவறி பெய்த மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.மின் உற்பத்தி வளா்ச்சி இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 12.7 சதவீதமாகவும், பிப்ரவரி மாதத்தில் 8.2 சதவீதமாகவும் இருந்தது.ஆனால் மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அது முறையே 1.6 சதவீதம் மற்றும் 1.1 சதவீதமாகக் குறைந்தது.மே மாதத்தில் வெறும் 0.9 சதவீதமாக இருந்த மின் உற்பத்தி வளா்ச்சி, ஜூனில் 4.2 சதவீதமாக இருந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT