இந்தியா

ரூ.12 லட்சம் கடன்... வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் முதல்வர் மகன்!

மறைந்த கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி எம்எல்ஏவாக இருந்த புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் அவரது மகனான சாண்டி உம்மன் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

DIN

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜூலை 18ஆம் தேதி காலமானாா். புதுப்பள்ளி தொகுதியில் 1970 முதல் 53 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்த அவா், இருமுறை கேரள முதல்வராக பதவி வகித்துள்ளாா். எனவே, அவரது மறைவை அடுத்து அத்தொகுதியில் நடத்தப்படும் இடைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் யாா் போட்டியிடுவாா் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு, புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்லில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன்(37) போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், செப்.5 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்காக சாண்டி உம்மன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் அவர் சொத்து மதிப்பு குறித்த விவரங்களில், 8 வங்கிக் கணக்குகள் மற்றும் கையிருப்பு ரூ.15,000 சேர்த்து தன்னிடம் மொத்தமாக ரூ.15,98,600 இருப்பதாகவும் நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வங்கி மற்றும் கூட்டறவு வங்கிகளில் ரூ.12 லட்சம் கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த உம்மன் சாண்டியின் மகன் கடனாளியாக இருப்பது அம்மாநில மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உம்மன் சாண்டிக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். தனது குடும்பத்தில் இருந்து எவரும் தீவிர அரசியலில் ஈடுபடுவதை உம்மன் சாண்டி விரும்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக். 3 பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுமா?

கரூர் செல்லாதது ஏன்? விடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்

திருவண்ணாமலை பாலியல் வன்கொடுமை: முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?

“கரூர் பலி: திட்டமிடப்பட்டதா?” அமைச்சர் Anbil Mahesh பதில்! | Karur | TVK | VIJAY | DMK

பாஜக கூட்டணியில் இணைவதற்கு பதில் ராஜிநாமா செய்துவிடுவேன்: ஒமர் அப்துல்லா!

SCROLL FOR NEXT