இந்தியா

கோவாவில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம்: 12 பேர் கைது

கோவாவில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

DIN

கோவாவில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இத்தொடர் குறித்து பொதுமக்களிடம் பந்தயம் கட்டி ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தை சிலர் நடத்தி வருவதாக பொர்வோரிம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து பனாஜியில் உள்ள ஹோட்டல் வளாகம் ஒன்றில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். 

கைதானவர்கள் 12 பேரும் தில்லி, மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT