2014ஆம் ஆண்டு சராசரி இந்தியரின் ஊதியம் ரூ.4 லட்சத்திலிருந்து 9 ஆண்டுகளில் ரூ.13 லட்சமாக உயர்ந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டுக்கு முன்பே ஊழல் மற்றும் முறைகேடு என்ற சகாப்தம் முடிந்துவிட்டது, தற்போது, மக்களின் உரிமை மற்றும் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது என்று கூறினார் பிரதமர் மோடி.
நாட்டில் தற்போது வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, மக்களின் வரிப்பணம் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறது என்று மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்யே காரணம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழாவில், காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 13.50 கோடி இந்தியர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்து மேலே வந்துவிட்டதாக நிதி ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ளது.
வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, வருவாய் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையே காட்டுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு சராசரி இந்தியரின் ஊதியம் ரூ.4 லட்சத்திலிருந்து 9 ஆண்டுகளில் ரூ.13 லட்சமாக உயர்ந்துள்ளது என்று வருமான வரிக் கணக்குகளின் எண்ணிக்கை தெரிவிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.