இந்தியா

அடுத்த பிரதமர் யோகி ஆதித்யநாத்? ரஜினி காலில் விழுந்ததன் காரணம் கூறிய காங்கிரஸ்!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாட்டின் அடுத்த பிரதமர் என்பது போன்ற பேச்சுகள் எழுந்துள்ளன

DIN


உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாட்டின் அடுத்த பிரதமர் என்பது போன்ற பேச்சுகள் எழுந்துள்ளன. இதனால்தான் நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து வணங்கி மரியாதை செலுத்தியதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. 

இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அதனை முடித்துக்கொண்டு உத்தரப் பிரதேசம் சென்றார். அங்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்தார். அப்போது அவர் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசி பெற்றார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ், எதிர்காலத்தில் யோகி ஆதித்யநாத் பிரதமராவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக விவாதங்கள் எழுந்து வருகின்றன. இல்லையென்றால் நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு செய்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. 

பிரதமர் நரேந்திர மோடியின் காலில் கூட ரஜினிகாந்த் விழுந்து வணங்கியதில்லை. ரஜினிக்கும் யோகி குறித்து அவ்வாறு தோன்றியிருக்கலாம். எதிர்கால பிரதமர் குறித்த பேச்சுகளில் யோகியின் பெயர் எழுகிறது எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT