இந்தியா

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: உச்சநீதிமன்றம்

DIN

கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனக் கூறி இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சேலம் சுகனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி கடந்த 2018ல் கோயில் நிர்வாக அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அங்கு பணிபுரிந்து வரும் முத்து சுப்ரமணிய குருக்கள் இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தீர்ப்பு வழங்கினார். பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வும் தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தனர். 

தொடர்ந்து மனுதாரர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஸ்வர் மற்றும் பரிதிவாலா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

அப்போது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து, கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT