இந்தியா

ஹரியாணாவை தொடர்ந்து அசாம் கல்வி நிறுவனங்களிலும் சந்திரயான் நேரடி ஒளிபரப்பு!

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதிக்கும் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு ஹரியாணாவை தொடர்ந்து அசாமில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.  

DIN

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதிக்கும் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு ஹரியாணாவை தொடர்ந்து அசாமில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. 

இதுதொடர்பாக மாநில கல்வித்துறை அதிகாரி கூறுகையில், 

சந்திரயான்-3 விண்கலமானது எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் சுமார் ஒரு மாத பயணத்தைத் தொடர்ந்து, விண்கலத்தில் செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும் இன்று மாலை 6 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது. 

இந்நிலையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பள்ளிகள் இன்று மாலை 6  மணி வரை செயல்படும் இதுதொடர்பான அறிவிப்பை பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. 

சந்திரயான் லேண்டிங் மாணவர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும் உதவும் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT