கோப்புப் படம். 
இந்தியா

திருப்பதி: 4-வது சிறுத்தை சிக்கியது

திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4ஆவது சிறுத்தை சிக்கியது.  

DIN

திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4ஆவது சிறுத்தை சிக்கியது. 

ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய அண்மையில் திருப்பதிக்கு வந்தனர். திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாகச் சென்றுபோது, அந்தப் பாதையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு வனத்துக்குள் ஓடியது. 

பின்னர், சடலமாக அந்த சிறுமி மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைத்தனர். இந்த நிலையில் திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4ஆவது சிறுத்தை சிக்கியது. 

திருப்பதி நடைப்பாதைக்கு வரும் சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் 4ஆவது சிறுத்தை சிக்கியது. இதுவரை நடைப்பாதையில் சுற்றித்திரிந்த 4 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT