இந்தியா

நிலவின் தென்பகுதியில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம்!: ரோவர் உறுதி!

நிலவில் தென்துருவத்தில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம் இருப்பதை ரோவர் விண்கலம் உறுதி செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

DIN

நிலவில் தென்துருவத்தில் ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம் இருப்பதை ரோவர் விண்கலம் உறுதி செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரோ, சல்ஃபர், இரும்பு, குரோமியம், சிலிக்கான், டைட்டானியம், மாங்கனீசு உள்ளிட்டவை இருப்பதை ரோவர் உறுதி செய்துள்ளது. 

லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி மூலம் ரோவர் நிலவில் உள்ள தனிமங்களை கண்டறிந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

நிலவின் தென் துருவப் பகுதி குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக, ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி ஆக. 23 மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

லேண்டரில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளியே வந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவற்றின் செயல்பாடுகளை தொடர்ந்து இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT