இந்தியா

இந்தியா கூட்டணியில் கேஜரிவால் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும்!

இந்தியா கூட்டணியில் கேஜரிவால் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் தெரிவித்துள்ளார். 

DIN

இந்தியா கூட்டணியில் கேஜரிவால் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து போராடி வருவதால், இந்தியாவின்  தலைவராக கேஜரிவால் இருக்க வேண்டும். 

கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் நான் அரவிந்த் கேஜரிவாலை முன்னிறுத்துவேன். அவர் தொடர்ந்து மக்களின் குறைகளை முன்வைத்து, தில்லியில் குறைந்த பணவீக்கத்திற்கு தேவையான வழிவகைகளை செய்து வருகிறார். 

26 கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றன. கர்நாடகத்தில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தின்போது, தொகுதிக்கு இந்தியா என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டது. 

இதையடுத்து மூன்றாவது கூட்டணிக் கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப் 1-ல் நடைபெற உள்ளது. வரவிருக்கும் கூட்டத்தில் ஆம் ஆத்மி தனது பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT