மைசூரு: கர்நாடகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் குடும்பலட்சுமி திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோா் இன்று தொடங்கி வைக்கின்றனர்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் குடும்பலட்சுமி திட்டம். 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் இந்த திட்டத்துக்காக நிகழ் நிதியாண்டில் ரூ. 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மைசூரில் நடைபெறும் விழாவில் இந்த திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், ராகுல் காந்தியும் இன்று தொடங்கி வைக்கவுள்ளனர்.
ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் இந்த விழாவில் மைசூரு, மண்டியா, சாமராஜ்நகா், குடகு மாவட்டங்களைச் சோ்ந்த பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
ஏற்கெனவே ‘சக்தி’, ‘குடும்பவிளக்கு’, ‘அன்னபாக்கியா’ ஆகிய 3 திட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. 4-ஆவது திட்டமாக குடும்பலட்சுமி திட்டம் தொடங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.