இந்தியா

நிலவில் பாதுகாப்பாகச் சுற்றி வரும் ரோவர்: இஸ்ரோவின் புதிய விடியோ வெளியீடு!

நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாகச் சுற்றி வரும் புதிய விடியோ ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 

DIN

நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாகச் சுற்றி வரும் புதிய விடியோ ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 

இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை(ஆக. 23) மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 

முதலில் லேண்டர் தரையிறங்கிய நிலையில் பின்னர் ரோவரும் தரையிறங்கி நிலவு மேற்பரப்பின் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. 

இந்த புகைப்படங்களின் மூலமாக நிலவின் மேற்பரப்பில் கந்தகம்(சல்ஃபா்) இருப்பதை பிரக்யான்' ரோவா் கண்டறிந்துள்ளதாகவும் ஹைட்ரஜனுக்கான தேடல் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்தது. 

தொடர்ந்து, பிரக்யான் ரோவரின் செயல்பாடுகளை இஸ்ரோ விடியோ மூலமாக வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், நிலவில் பாதுகாப்பாக ரோவர் சுற்றி வரும் விடியோவை வெளியிட்டுள்ள இஸ்ரோ, 'பாதுகாப்பான பாதையைத் தேடி ரோவர் சுழற்றப்பட்டபோது லேண்டர் விக்ரம் இதனை படம்பிடித்துள்ளது. ரோவர் சுற்றி வருவதை ஒரு குழந்தையைப் போல் அல்லவா, விக்ரம் லேண்டர் கண்காணித்து வருகிறது' என்று பதிவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

SCROLL FOR NEXT