செப்.2-ல் சத்தீஸ்கர் செல்கிறார் ராகுல் காந்தி!
இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சத்தீஸ்கர் மாநிலத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சத்தீஸ்கர் மாநிலத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.
ராய்பூரில் செப்.2-ம் தேதி நடைபெறும் "யுவ சம்வத்" நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கு நடைபெறும் இளைஞர் பேரணியில் ராகுல் உரையாற்ற உள்ளார்.
மேலும், சட்டப்பேரவை தேர்தலுக்கு மாநில அரசு செய்த வளர்ச்சிப் பணிகளை குறித்தும் கேட்டறிய உள்ளார்.
மாநிலத்தில் 48 லட்சம் இளைஞர் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4.43 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.