இந்தியா

கூட்டணியில் இணைகிறாரா? சோனியாவுடன் ஒய்.எஸ்.ஆர் சர்மிளா சந்திப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவர்  ஒய்.எஸ். சர்மிளா நேரில் சென்று சந்தித்தார். 

DIN

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவர்  ஒய்.எஸ். சர்மிளா நேரில் சென்று சந்தித்தார். 

தில்லியிலுள்ள சோனியா காந்தி இல்லத்திற்கு சென்ற ஒய்.எஸ். சர்மிளா, ஒரு மணிநேரத்துக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டார்.

ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். சர்மிளா, சோனியா காந்தியை சந்திப்பதற்காக புதன்கிழமை தில்லி வந்தார். 

அதனைத் தொடர்ந்து இன்று சோனியா காந்தியை அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். சுமார் ஒருமணிநேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக இந்த சந்திப்பு இருக்கும் எனக் கருதப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காசிதா்மம் தவச்சாலையில் நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் எஸ்ஐஆா் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நிழற்குடைக்கு அனுமதி கோரி அமைச்சரிடம் மனு

அரியப்பபுரம் அரசுப் பள்ளி வில்லுப்பாட்டில் சிறப்பிடம்

ஆய்க்குடியில் ரூ.33.59 லட்சம் நலத்திட்ட உதவிகள்

SCROLL FOR NEXT