இந்தியா

மணிப்பூரில் துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ.18 கோடி கொள்ளை!

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கியின் கிளையில் ரூ.18.80 கோடி பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கியின் கிளையில் ரூ.18.80 கோடி பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்று உள்ளது. நவ.30(மாலை) 5.40 மணியளவில் சுமார் 10 பேர் அடங்கிய கும்பல் ஒன்று ஆயுதங்களோடு, முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு வங்கிக்குள் புகுந்தனர். 

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்களைத் தாக்கி உள்ளே நுழைந்த அந்த கும்பல், ஊழியர்களைத் துப்பாக்கி முனையில், பண லாக்கரை திறக்கச் செய்து அதிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்தனர். இந்த கும்பல் ரூ.18.80 கோடி பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக உக்ருல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் முழுவதும் வங்கியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் சிசிடிவி ஆதாரங்களை வைத்து கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT