முகப்பு
இந்தியா

ஒடிசாவில் சர்வதேச மணல் சிற்பக் கலைவிழா தொடக்கம்

சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழாவின் 13வது நிகழ்வு ஒடிசாவின் புரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 2 டிசம்பர் 2023, 11:15 am IST
பகிர்:

13-வது சர்வதேச மணல் சிற்பக் கலை விழா ஒடிசாவில் தொடங்கியது.

சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழாவின் 13வது நிகழ்வு ஒடிசாவின் புரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான மணல் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

Advertisement

Advertisement

ஒவ்வொரு ஆண்டும், கலாச்சாரம் முதல் சமூக பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை பல்வேறு கருப்பொருள்களில் இந்த விழா நடைபெறுகிறது.

கடற்கரையின் மணலைப் பயன்படுத்தி சிக்கலான வடிவமைப்பில் பல்வேறு சிற்பங்களை கலைஞர்கள் உருவாக்குகின்றனர். அவை பெரும்பாலும் செய்திகளை வெளிப்படுத்தும் சிற்பங்களாகவே இருக்கின்றன.

இந்த விழாவானது சர்வதேச மணல் சிற்ப கலைஞர்களை கொண்டாடுவது மட்டுமல்லாமல் உள்ளூர் கைவினைஞர்களின் திறமைகளையும் ஊக்குவிக்கிறது.

சுற்றுலாவை மேம்படுத்துதல், மணல் சிற்பத்தின் செழுமையான கலைத்திறனைக் கொண்டாடுதல் மற்றும் கலைஞர்களுக்கு யோசனைகள் மற்றும் நுட்பங்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதை இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, ரஷ்யா, பெலாரஸ் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கலைஞர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சர்வதேச மணல் கலை விழா 2023 இல் பங்கேற்கிறார்கள்.

2011ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் புரியில் உள்ள சந்திரபாகா கடற்கரையில் முதல் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடங்கப்பட்டது. இது ஆண்டுதோறும் டிசம்பர் 1 முதல் 5 வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments