இத்தாலி பிரதமருடன் மோடி | X (Twitter) 
இந்தியா

வைரல் செல்ஃபி: மோடியின் பதிவு!

இத்தாலி பிரதமருடன் மோடி எடுத்துக் கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

DIN

இத்தாலியன் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி உடன் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கொண்ட செல்ஃபி வைரலானதைத் தொடர்ந்து, எக்ஸ் பக்கத்தில் அதுகுறித்து பதிவிட்டுள்ளார் மோடி.

துபையில் நடைபெற்ற காப்28 பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்ட மோடி இத்தாலி பிரதமர் உடன் செல்ஃபி எடுத்துள்ளார். இதனை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஜியார்ஜியா,  ‘காப்28-ல் நல்ல நண்பர்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இருவரின் பெயரையும் இணைத்து ‘மெலோடி’ என்கிற ஹேஷ்டேக்கும் பதிவிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், ஜியார்ஜியாவின் பதிவைப் பகிர்ந்த மோடி,  “நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது” எனப் பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு(காப்28) துபையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மோடி, இத்தாலி பிரதமர் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து வெள்ளிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடியல் பயணம்: ஒவ்வொரு மகளிரும் ரூ. 50,000 வரை சேமிப்பு - முதல்வர் ஸ்டாலின்

தீபாவளி முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

அணு ஆயு​தம் என்​னும் அச்​சு​றுத்​தல்

வேலூா் சிறையில் ஆயுள் கைதி அறையில் கைப்பேசி பறிமுதல்

SCROLL FOR NEXT