கோப்புப்படம் 
இந்தியா

வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

மும்பையில் பணியாற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த பெண்ணை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

DIN

மும்பையில் டிஜே(DJ)-வாகப் பணியாற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தின் கீழ் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். 

31 வயதானக் குற்றவாளியும் டிஜே-வாகப் பணியாற்றி வருகிறார். தனக்குக் கீழ் வேலை செய்துவரும் அந்தப் பெண்ணை 2019ல் அவரது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னும் குற்றவாளியால் தொடர் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானதாகப் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். 

அவரது ஆசைக்கு மறுப்பு தெரிவித்தால் அந்தப் பெண்ணை வேலையை விட்டு விரட்டிவிடுவதாகவும், அவரது அந்தரங்கப் புகைப்படங்களை பரப்பிவிடுவதாகவும் மிரட்டி அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 2020ல் அந்த நபருக்கு வேறு பெண்ணுடன் திருமணமான பின்னும் இவரைத் தொடர் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். 

பாதிக்கப்பட்ட மெக்சிகோவைச் சேர்ந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT