இந்தியா

சத்தீஸ்கர்: முன்னிலையில் உள்ள காங்., பாஜக மாநிலத் தலைவர்கள்!

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக மாநிலத் தலைவர்கள் அவர்களது தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். 

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்.3) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் மாநிலத் தலைவர்கள் அவர்களது தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றனர்.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் அவர் போட்டியிட்ட பதான் தொகுதியில் 187 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் விஜய் பகேலை விட முன்னிலையில் உள்ளார். 

அதேபோல, பாஜக மாநிலத் தலைவர் அருண் சவோ அவர் போட்டியிட்ட லோர்மி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தானேஷ்வர் சாஹுவை விட 2,376 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, பாஜக 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 46 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மை கிடைக்கும் நிலையில், பாஜக 40 தொகுதிகளில் முன்னிலை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT