நான்கு மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க போதுமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
தெலங்கானாவின் பிராந்திய கட்சியான பிஆர்எஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
காங்கிரஸின் மோசமான செயல்திறனும் பழங்குடி வாக்காளர்களிடையே ஆதரவின்மையும் அக்கட்சிக்கு பாதகமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பழங்குடி வாக்காளர்களின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துள்ளது.
ம.பி.யில் 155 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்க காங்கிரஸ் 72 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் 70 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
சத்தீஸ்கரில் இழுபறி நிலவினாலும் காங்கிரஸை விட கூடுதலான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தெலங்கானா: காங்கிரஸ் -64, பிஆர்எஸ் - 43 இடங்களில் முன்னிலை
தெலங்கானாவில் காங். 69 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. சந்திரசேகர் ராவ்வின் பிஆர்எஸ் கட்சி 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.