தற்காலிக போர் நிறுத்தம் வெள்ளிக்கிழமை முடிந்ததிலிருந்து இதுவரை 400க்கும் அதிகமான தாக்குதல்களை காஸா மீது நடத்தியிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்துவரும் தொடர் போரில் 14,000த்திற்கும் அதிகமான மக்கள் இதுவரைக் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் மீண்டும் துவங்கி மூன்று நாள்களில் 240 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது. ஹமாஸை அழிக்காமல் போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு தெரிவித்துள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்திவருகின்றன.
ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகள் இஸ்ரேல் நகரங்கள் மீது ராக்கெட் தாக்குதல்கள் நடத்திவிருப்பதாக தெரிவித்திருந்தன. இரண்டு வீரர்கள் போரில் இறந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உறுதிமொழியை ஏற்க மறுக்கும் இந்தியா!
மேலும், மத்திய காஸாவில் உள்ள அகதிகள் முகாமில் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. மனிதாபிமான உதவிகள் எதையும் இஸ்ரேல் காஸாவுக்குள் அனுமதிக்காத நிலையில், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் உணவு, தண்ணீர், மருத்துவ உதவிகள் இன்றி தவித்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.