முகப்பு
இந்தியா

மக்களின் ஆசி பாஜகவுக்கு உண்டு: ஜோதிராதித்யா சிந்தியா

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. முன்னிலை வகிப்பதைத் தொடந்து ஜோதிராதித்யா தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Updated On : 3 டிசம்பர், 2023 at 10:34 AM
ஜோதிராதித்யா சிந்தியா
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:50 PM

மத்திய பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இது குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மக்களின் ஆசி பாஜகவுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவர்,  “மத்திய பிரதேசத்தைப் பொருத்தவரை நான் தொடர்ச்சியாக சொல்லி வந்ததுதான் நடந்துள்ளது. சமூக நலம் சார்ந்த எங்களின் திட்டங்கள் மற்றும் வறுமையில் இருப்பவர்களை உயர்த்தும் திட்டங்களின் பலன் இது. மக்களின் ஆசி பாஜகவோடு தொடர்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் 137 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 89 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

Advertisement

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.