முகப்பு
இந்தியா

முதல்வர் கமல்நாத்! ம.பி.யில் காங்கிரஸ் தொண்டர்களின் பதாகையால் பரபரப்பு!

முதல்வராக பொறுப்பேற்கவுள்ள கமல்நாத்துக்கு வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு போபாலில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 டிசம்பர், 2023 at 10:33 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:50 PM


மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத் என காங்கிரஸ் தொண்டர்கள் வைத்ததாக, இணையத்தில் பகிரப்படும் பதாகைகளின் புகைப்படங்களால் பரபரப்பு நிலவிவருகிறது. 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், வாக்குகள் முழுமையாக எண்ணி முடிப்பதற்குள்ளாக, முதல்வர் கமல்நாத் என காங்கிரஸ் தொண்டர்கள் பதாகைகளை வைத்துள்ளனர். 

Advertisement

முதல்வராக பொறுப்பேற்கவுள்ள கமல்நாத்துக்கு வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு போபாலில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை பாஜகவினர் இணையத்தில் பகிர்ந்து, இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.